புரிதலின் கனவினுள் விருப்பம்
December 12, 2024•47 words
புரிதலின் கனவினுளுள விருப்பம்
பிரசாந்த் க
விழிகளில் வரைந்திட்ட வலிகளை
பொறுத்திடும் பொருத்தமும்
வழியதை வழிந்திட்டு நடைமுறை
காட்டிடும் ஒலியது ஒளிருது
பருவத்தில் பிழைந்திட்ட மருவது மறைந்தது மருவியே
கனிகளில் மலர்ந்திடும் மலரது
செறிந்தினி வுணர்ந்திடும் பக்குவம்
மனங்களில் மணந்திடும் அனகமும்
செழித்தூன்றி அணங்கயருமே
உற்றதும் கற்றதே மற்றவை யற்றதே
பெற்றரும்புற்றது சொட்டுது கிட்டுது
தருவதும் பெறுவதும் உயிரது வுணர்ந்தது
புரிதலும் விருப்பமும் அறிந்துணர்ந்தாக்கமும்
புரிந்திடப்புரிந்திடும்