அப்துல் ரகுமான்
November 29, 2024•98 words
அப்துல் ரகுமான்
நான் தவளை
என் கிணறு நீ
இது என் பெருமை.
நான் வெறும் ஓட்டை மூங்கில்
காற்றும் நீ
வாயும் நீ
விரலும் நீ.
மேகமாகி
உன்னைப் பிரிவதும்
நதியாகி
உன்னைத் தேடிவருவதும்
எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
பாருக்குள்ளே நல்ல நாடு
அவர்களைச் சிறையில்
சந்தித்தேன்.
“என்ன குற்றம் செய்தீர்கள்”
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச்
சொன்னார்கள்..
அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்ய விடாமல் தடுத்ததாகத்
தண்டித்து விட்டார்கள்.”
“அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படச்
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்ததாக அழைத்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”
“வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன். அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக அடைத்துப்போட்டுவிட்டார்கள்”
நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும் இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது..
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்