சுட்டு வினா எழுத்துக்கள்
July 27, 2025•165 words
சுட்டு வினா எழுத்துக்கள்
சுட்டு:
அகச் சுட்டு, புறச் சுட்டு
அண்மைச்சுட்டு, சேய்மைச்சுட்டு
சுட்டுக் திரிபு
வினா:
அகவினா, புறவினா
சுட்டெழுத்துக்கள்:
ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்களுக்கு சுட்டெழுத்துக்கள் என்று பெயர்.
சுட்டெழுத்துக்கள்: அ, இ, உ
('உ' வை சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை)
அகச் சுட்டு, புறச் சுட்டு
அகச் சுட்டு:
சுட்டு எழுத்துக்களை நீக்கினால் பொருள் தருவதில்லை.
எ.கா: அவன், இவன், அது, இது
புறச் சுட்டு:
சுட்டு எழுத்துக்களை நீக்கினாலும்
பொருள் தருகிறது.
எ.கா: அவ்வானம், இம்மலை, இந்நூல்
அண்மைச்சுட்டு, சேய்மைச்சுட்டு
அண்மைச்சுட்டு:
அருகில் உள்ளவற்றைச் சுட்டுகின்றன.
அண்மைச்சுட்டெழுத்து: இ
எ.கா: இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு
சேய்மைச்சுட்டு:
தொலைவில் உள்ளவற்றைச் சுட்டுகின்றன.
சேய்மைச்சுட்டெழுத்து: அ
எ.கா: அவன், அவர், அது, அவை, அம்மரம், அவ்வீடு
சுட்டுக் திரிபு:
அ, இ ஆகிய சுட்டெழுத்துக்கள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுக் திரிபு எனப்படும்.
எ.கா:
அம்மரம்-அந்தரம்,
இவ்வீடு-இந்தவீடு
வினா எழுத்துக்கள்:
வினாப் பொருளைத் தரும் எழுத்துக்கள்.
வினா எழுத்துக்கள்: எ, யா, ஆ, ஓ, ஏ
மொழியின் முதலில் வருபவை: எ, யா
எ.கா: எங்கு, யாருக்கு
இறுதியில் வருபவை: ஆ, ஓ
எ.கா: பேசலாமா, தெரியுமோ
முதலிலும் இறுதியிலும் வருபவை: ஏ
எ.கா: ஏன், நீதானே
அகவினா:
எ.கா: எது, யார், ஏன்
புறவினா:
வினா எழுத்துக்களை நீக்கினாலும் பொருள் தரும்.
எ.கா: அவனா, வருவானா, அவரோ