உருபன்: உம்(பெயர்க்கு)

உருபன்: உம்(பெயர்க்கு)

இணைப்பு (And)
முழுமை (All)
சேர்ப்பு (Also)

1. இணைப்புப் பொருள் (Conjunction - "And")

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்ச்சொற்களை இணைக்கப் பயன்படுகிறது.

இலக்கணத்தில் இதனை ‘எண்ணும்மை’ என்பர்.

அமைப்பு: பெயர் + உம் ... பெயர் + உம்

எடுத்துக்காட்டு:

ராமனும் லட்சுமணனும் வந்தனர். (Rama and Lakshmana came).

இரவும் பகலும் உழைத்தார். (He worked day and night).


2. முழுமைப் பொருள் (Totality - "All/Whole")

ஒரு எண்ணிக்கையை அல்லது குழுவை முழுமையாகக் குறிக்கப் பயன்படுகிறது. இதனை ‘முற்றும்மை’ என்பர்.

அமைப்பு: எண்ணிக்கை/பெயர் + உம்

எடுத்துக்காட்டு:

மூவரும் வந்தனர் (All three came).

எல்லோரும் நலமா? (Is everyone fine?).

வேலை முழுவதும் முடிந்தது (The whole work is done).


3. தழுவிய பொருள் / அழுத்தம் (Also / Even)

ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது பொருளையோ அழுத்திச் சொல்லவோ, அல்லது "இவரும் கூட" என்ற பொருளிலோ வரும்.

இதனை ‘சிறப்பும்மை’ அல்லது ‘எச்சவும்மை’ என்பர்.

அமைப்பு: தனிச்சொல் + உம்

எடுத்துக்காட்டு:

அவனும் வந்தான். (He also came).

நீயும் சாப்பிடலாம். (You too can eat).

சிறிய எறும்பும் கடிக்கும். ( Even a small ant can bite).


இணைப்பு (And)
முழுமை (All)
சேர்ப்பு (Also)

இணைப்பு (And) தாயும் சேயும் Mother and Child
முழுமை (All) இருவரும் Both of them
சேர்ப்பு (Also) அவனும் He also


You'll only receive email when they publish something new.

More from Prasanth
All posts