புள்ளி மயங்கியல்: ந்

புள்ளி மயங்கியல்: ந்

  • சொற்கள்: பொருந், வெரிந்
  • அல்வழியில் நகர ஈறு
  • வேற்றுமையில் நகர ஈறு
  • வெரிந்

சொற்கள்: பொருந், வெரிந்

பொருந்= நடிப்பு, போர் முனை
வெரிந்= முதுகு


அல்வழியில் நகர ஈறு

பொரு{ந்}×{க், ச், த், ப்}==>பொருந்×உ{க், ச், த், ப்}

298

நகர இறுதியும் அதன் ஓரற்றே

உகரம் பெறுதலும்
கசதபக்கள் வரின் மிகுதலும்
ஞநமவக்கள் வரின் மிகாது இயல்பாதலும்

--

கசதபக்கள் வரின் மிகுதலும்

பொரு[ந்+க]டிது

பொருந்>பொருந்+உ>பொருநு
கடிது>க்கடிது

பொரு[நுக்க]டிது

இதேபோல்: பொருநுச்சிறிது, பொருநுத்தீது, பொருநுப்பெரிது

--

ஞநமவக்கள் வரின் மிகாது இயல்பாதலும்

பெரு{ந்}×{ஞ், ந், ம், வ்}==>பெருந்×உ

பொரு[ந்+வ]லிது

பொருந்>பொருந்+உ>பொருநு
வலிது

பொரு[நுவ]லிது

இதேபோல்: பொருநுஞான்றது, பொருநுவலிது, பொருநுமாண்டது


வேற்றுமையில் நகர ஈறு

பொரு{ந்}×{க், ச், த், ப்}==>பொருந்×அ{க், ச், த், ப்}

வேற்றுமைக்கு உ-க்கெட அகரம் நிலையும்

பொருநக் கடுமை = பொருநினது கடுமை (அல்லது பொருநின்கண் கடுமை).

பொரு[ந்+க]டுமை

பொருந்>பொருந்+அ>பொருந
கடுமை >க்கடுமை
பொரு[நக்க]டுமை

இதேபோல்: பொருநச்சிறுமை, பொருநத்தீமை, பொருநப்பெருமை

விலக்கு:

வெரி[ந்+செ]ன்றனன்
வெரி[நுச்செ]ன்றனன்


வெரிந்

வெரி{ந்}×{க், ச், த், ப்}==>
வெரி×{ங், ஞ், ந், ம்}/வெரி×{க், ச், த், ப்}

'வெரிந்' என் இறுதி முழுதும் கெடுவழி,
வரும் இடன் உடைத்தே மெல்லெழுத்து இயற்கை.

நகரம் நீங்கி
வருமொழி வல்லினத்திற்கு இனமான மெல்லினம் வரும்

வெரி[ந்+கு]றை

வெரிந்>வெரிங்
குறை

வெரி[ங்கு]றை

இதேபோல்: வெரிஞ்சிறப்பு, வெரிந்தளர்ச்சி, வெரிம் பொலிவு

--

வெரி{ந்}×{ஞ், ந், ம், வ்}==>வெரிந்உ×{ஞ், ந், ம், வ்}

வெரி[ந்+ஞா]ற்சி=வெரி[நுஞா]ற்சி

இதேபோல்: வெரிஞுமாட்சி, வெரிஞுவலிமை

--

விலக்கு:

வெரிந்×{ய், உ}==>வெரிந்{ய், உ}

வெரிந்யாப்பு
வெரிந்உயர்ச்சி

இங்கு:

வெரி[ந்+ய்]ஆப்பு>வெரி[ந்ய்]ஆப்பு
வெரி[ந்+உ]யர்ச்சி
>வெரி[ந்உ]யர்ச்சி

--

ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே

வெரி[ந்+கு]றை

வெரிந்>வெரிக்
குறை

வெரி[க்கு]றை

இதே போல்: வெரிச்சுழி வெரித்தோல் வெரிப்பொழிவு

வெரிந் என்னும் சொல் வன்கணத்தோடு புணர்வழி இறுதி நகரங் கெட்டு மெல்லெழுத்துப் பெறும். அன்றி வல்லெழுத்தும் பெறும்.


விதிகள்

{ந்}+மொழிமுதல்22{அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ்}

அல்வழி:

விதி: பொரு{ந்}×{க், ச், த், ப்}>பொருந்×உ{க், ச், த், ப்}

எ.கா: பொரு[ந்+க]டிது=பொரு[நுக்க]டிது

விதி: பெரு{ந்}×{ஞ், ந், ம், வ்}>பெருந்×உ

எ.கா: பொரு[ந்+ஞா]ன்றது=பொரு[நுஞா]ன்றது

வேற்றுமை:

விதி: பொரு{ந்}×{க், ச், த், ப்}>பொருந்×அ{க், ச், த், ப்}

எ.கா: பொரு[ந்+க]டுமை=பொரு[நக்க]டுமை

வெரிந்

விதி: வெரி{ந்}×{க், ச், த், ப்}>
வெரி×{ங், ஞ், ந், ம்}/வெரி×{க், ச், த், ப்}

எ.கா: வெரி[ந்+கு]றை=வெரி[ங்கு]றை/வெரி[க்கு]றை

விதி விலக்கு:
வெரி[ந்+செ]ன்றனன்
வெரி[நுச்செ]ன்றனன்

விதி: வெரி{ந்}×{ஞ், ந், ம், வ்}>வெரிந்உ×{ஞ், ந், ம், வ்}

எ.கா:
வெரி[ந்+ஞா]ற்சி=வெரி[நுஞா]ற்சி

விதி விலக்கு: வெரிந்×{ய், உ}>வெரிந்{ய், உ}

எ.கா: வெரி[ந்+ய்]ஆப்பு>வெரி[ந்ய்]ஆப்பு
வெரி[ந்+உ]யர்ச்சி>வெரி[ந்உ]யர்ச்சி


You'll only receive email when they publish something new.

More from Prasanth
All posts