தமிழில் - திரிபு வேற்றுமை 8:13 - 8.12.2025

தமிழில் - திரிபு வேற்றுமை

  • திரிபு, வேற்றுமை
  • உருபன்கள்
  • திணை, பால், எண், இடம், காலம்
  • வேற்றுமை உருபுகள்
  • எச்ச உருபன்கள்
  • எதிர்மறை
  • உம்
  • ஆல்
  • தான்
  • இல்
  • ஓடு

திரிபு, வேற்றுமை

கட்டு நிலை உருபன்கள்:
தனியே நின்று பொருளாத

திரிபு: வகை மாற்றாத

திரிபு(Inflections)

  1. வினைத்திரிபு Conjugation (verbal inflections)
  2. பெயர்த்திரிபு Declension (Noun inflections)

வேர்ச்சொல்லின் சொல் வகைப்பாடு மாறாமல் வேறுபடுத்திக் காட்டும் உருபன்கள் வேற்றுமை உருபன்கள் அல்லது திரிபு உருபன்கள் ஆகும்.

எ.கா.:

பெயர்:

சொல்லின்=சொல்+இன்

வேர்: சொல்(பெயர்).
வேற்றுமை: இன்.

இன் ஆனது வேரான சொல் எனும் பெயர்ச்சொல்லை வேறு வினைச்சொல்லாகவோ உரிச்சொல்லாகவோ மாற்றவில்லை.

வினை:

நடந்தான், சொன்னான், அறிவேன்.

வேர்: நட, சொல், அறி(வினை).
வேற்றுமை: ஆன், ஏன்.

சொல்லில் திணை, பால், எண், இடம், காலம் போன்றவற்றை வேறுபடுத்த கட்டடமைக்கப்படுவது.

இலக்கண வகைப்பாட்டினை மாற்றாது.


உருபன்கள்

  1. ஒரெழுத்து உயிர்{அ...} : 12
  2. இரண்டு எழுத்துக்கள்
  3. திணை, பால், எண், இடம், காலம்
  4. வேற்றுமை உருபுகள்
  5. எச்ச உருபன்கள்

அடிக்கடி:
உம் உ ஏ அ ஆ ஓ

ஆல்


திணை, பால், எண், இடம், காலம்

திணை, பால்

திணை, பால் திரிபுகள்: (அன், ஆன்),(அள், ஆள், அடி), (அர், ஆர்).

எண் வேற்றுமைகள்: கள், s, es

ஒருமை பன்மை

கள்: கண்கள் கைகள் தன்மைகள்

இட வேற்றுமைகள்:

  1. தன்மை{ஏன், ஓம்},

  2. முன்{ஆய், த்ஈர்},

  3. படர்க்கை{ஆன், ஆள், ஆர்}}

கால வேற்றுமைகள்:

தமிழில் இடைநிலைகள் காலத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

இறந்த கால இடைநிலைகள்: த், ட், ற், இன்;

நிகழ்கால இடைநிலைகள்: கிறு, கின்று, ஆநின்று;

எதிர்கால இடைநிலைகள்: ப், வ்

இடம்+காலம்:

இடம் மற்றும் காலம் இரண்டினையும் பிணைந்து பொரட்கொள்ளும் உருபன்கள்

ஏன், ஓம்


வேற்றுமை உருபுகள்

ஐ ஆல் கு இன் அது கண்

தமிழை என்னை உன்னை
தமிழால்
தமிழுக்கு
தமிழின்
தமிழினது
தமிழின்கண்

தமிழால்
தமிழில்
தமிழோடு

எச்ச உருபன்கள்

  1. பெயரெச்ச விகுதிகள் (Relative Participle Markers)

வினையை முடிவடையச் செய்யாமல், அடுத்து வரும் ஒரு பெயர்ச்சொல்லை ஏற்கத் தயாராக மாற்றும் திரிபுகள்.
அ (மிக முக்கியமானது)

எ.கா: வந்த பையன் (வா + ந் + த் + அ)
இது இறந்தகாலம் மற்றும் நிகழ்காலம் காட்டும். (செய்கின்ற = செய் + கின்று + அ)

உம் (எதிர்காலம்/பழக்கம்)
எ.கா: வரும் விருந்தினர், ஓடும் நதி. (இது காலத்தையும் எச்சத்தன்மையும் காட்டுகிறது).

  1. வினையெச்ச விகுதிகள் (Verbal Participle Markers)

வினையை முடிவடையச் செய்யாமல், அடுத்து வரும் ஒரு வினைச்சொல்லை ஏற்கத் தயாராக மாற்றும் திரிபுகள்.
உ (இறந்தகால வினையெச்சம்)

எ.கா: வந்து (வா + ந் + த் + உ), செய்து.
இ (இறந்தகால வினையெச்சம்)
எ.கா: ஓடி (ஓடு + இ), பாடி.
ய் (சில இடங்களில்)

எ.கா: போய் (போ + ய்).

பு (செய்யுள் வழக்கு)

எ.கா: செய்பு.

  1. எதிர்மறை எச்ச உருபன்கள் (Negative Participle Markers)

வினையின் எதிர்மறைப் பொருளை உணர்த்தும் திரிபுகள்.

ஆ (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் / வினையெச்சம்)

எ.கா: ஓடா குதிரை (பெயரெச்சம்), உண்ணா வந்தான் (வினையெச்சம் - செய்யுள் வழக்கு).

ஆது (எதிர்மறை வினையெச்சம்)

எ.கா: வராது (வா + ஆது), செய்யாது.

மல் (எதிர்மறை வினையெச்சம்)

எ.கா: வராமல், காணாமல்.

  1. நிபந்தனை எச்சம் (Conditional)

ஆல் / கால்
எ.கா: வந்தால் (If came), செய்தக்கால்.

சுருக்கம்:

இவை ஏன் திரிபுகள்?

காலம் காட்டுகின்றன: (வந்த vs வரும்).
வேர்ச்சொல் வினை ஆகவே இருக்கிறது: சொல் வகை மாறுவதில்லை (முழுமையான பெயர்ச்சொல்லாக மாறுவதில்லை).

அமைப்பு முறை: இவை இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வினைகளுடன் இணைகின்றன.

(குறிப்பு: 'தல்', 'அல்' போன்ற விகுதிகள் சேர்ந்து 'வருதல்', 'செயல்' என வரும்போது அது வினையை பெயர்ச்சொல்லாக மாற்றுவதால் ஆக்கப் பெயர் உருபன்கள்)

உம்

வினைத்திரிபு:

குளிரும், நடக்கும், இருக்கும், செய்யும், சொல்லும்போது
இருக்கும்
கொள்ளும்
செய்யும் அடிக்கும் துடிக்கும்
விடும் இடும்

பெயர்த் திரிபு

குளிரும், பனியும், உடலும், உயிரும்
சொல்லும், கடலும், செயலும், மற்றும், மனமும் ஒன்றும்

நீயும்


ஏ:

வினைக்கு

இருக்காதே, இருவே, இருக்குமே
கொள்ளுவே, பெறுவே, கொள்ளுமே
செய்யுதே செய்யுமே செய்ய்ஆத்ஏ

ஒளியாதே பிழியாதே
காட்டுதே முளைக்குதே

நேசிக்குமே சுவசிக்குமே

பெயர்த் திரிபு:

தனியே, இல்லையே,

அவனே

முன்னிலை, உருவகம்: உறவு, பதிலிடு
உறவே, சித்திரமே, இரத்தினமே
மல்லிகையே தாமரையே பெண்ணே
கெடியே மரமே மாதுளையே செடியே

நெஞ்சுக்குள்ளே


வினைத் திரிபு:

இறந்தகால வினையெச்சம்:
இருந்து
கொண்டு பெற்று
செய்து பார்த்து நடந்து
வந்து

எதிர்கால ஏவல்:
ஒன்று(unite)
சொல்லு


ஆ:

வினைக்கு

எதிர்மறை பொருளில்
இருக்காது
கொள்ளாதே பெறாதே
செய்யாதோ செய்யாதடா
ஒன்றா(don't unite)

வினா:
பேசுமா
தந்தாளா
தருவாயா
உள்ளூரிலா

பெயர்க்கு

இரவா பகலா குளிரா வெயிலா ஒன்றா(எண்ஆ)

சுடர்விழியா திமிரா புன்னகையா
சிறுமொழியா முதல்-ஒளியா மோகினியா(உன்னை நான்- ஜே ஜே)

வினைக்கு

இருக்க
பெற உள்ள கொள்ள
செய்ய சொல்ல பறக்க உட்காற
வந்த போன

ஓ (O)

வினையிலும் பெயரிலும் ஐயம் (Doubt), வினா (Question) அல்லது தெரிவு (Option) பொருளைத் தரும் திரிபு உருபன்.

பெயர்த் திரிபு:

வினா/ஐயம்: அவனோ? (Is it him?), மரமோ?
தெரிவு: இதுவோ அதுவோ (This or that).

வினைத் திரிபு:

வருவானோ? (Will he come?)
இல்லையோ? (Isn't it?)

ஆல் (Conditional Marker)

ஒரு செயல் நிகழ்ந்தால் இன்னொன்று நிகழும் எனக் நிபந்தனை (Condition) விதிக்கும் திரிபு.

வினைத் திரிபு:
வந்தால் (If came) -> வா + ந் + த் + ஆல்
செய்தால்
படித்தால்

தான் (Emphasis Marker)

த்ஆன்

ஒரு சொல்லை அழுத்திச் சொல்லப் பயன்படும் இடைச்சொல் (Clitic). இதுவும் சொல்லின் இலக்கண வகையை மாற்றாது.

அவன்தான் (He only/specifically)
இப்போதுதான் (Just now)

வாசிக்க:

திணை பால் எண் இடம் காலம்
Class(Thinai) Gender Number Place Time

tense, mood, voice, aspect, person, number, case, and gender

https://ta.wikipedia.org/wiki/உருபனியல்

Text Processing, Tokenization & Characteristics, IST 441 Information Retrieval and Search, The Pennsylvania State University – PPTX
https://clgiles.ist.psu.edu/IST441/materials/powerpoint/text-week5/text-processing.pptx

இராசேந்திரன் சங்கர வேலாயுதன் – Archive.org
https://archive.org/details/rajendran-sankaravelayu
Flowchart of morph analyzer/generator for Tamil verbal complex (in Tamil)
Flowchart of morph analyzer/generator for Tamil Nominal Complex (in Tamil)

CreA வினை வடிவங்கள்
http://crea.in/verb-table#

Sarveswaran, Kengatharaiyer. "Morphology and Syntax of the Tamil Language" (PDF). arXiv (Research Paper). University of Jaffna, Sri Lanka. Retrieved 28 May 2025.
https://arxiv.org/pdf/2401.08367

மு, இராகவையங்கார். "வினைத்திரிபு விளக்கம்: Congugation of Tamil Verbs" (PDF). Wikimedia (Book). M. R. நாராயணையங்கார். Retrieved 28 July 2025.

Ayer, Mosur Venkataswami. "விகுதி விளக்கம்: The Terminations of Tamil Words" (PDF). Tamil Digital Library (Book). S.P.C.K. PRESS. Retrieved 28 July 2025.

7.5. ஓரெழுத்தொரு மொழி, பகுபதம், பகாபதம்-7ஆம் வகுப்பு

பகுபத உறுப்புகள் - 11ஆம் வகுப்பு பொதுத்தமிழ் - பக்கம்: 72-

சங்க இலக்கியம் - ச. அகத்தியலிங்கம்
இலக்கண வரலாறு - இரா. இளங்குமரன்


You'll only receive email when they publish something new.

More from Prasanth
All posts