வாழ்விட்ட பெயர்
August 14, 2026•220 words
வாழ்விட்ட பெயர் பட்டது போல்
உளம் பட்ட பெயர் வைத்து
நிலம் விட்ட துயர் போக்குவதாய்
நிதம் வட்டத்தினுள் துய்த்து
பணி கெட்ட தெனக் கூறினும்
நினை வினை மீறிக் கெட்டு
இடர் ஏறி இடர் மீண்டு
இல்ல மதில் உள்ள மது
மதி இரண்டும் கொள்ளுங் கால்
வட்டத் துய்ப்பில் உய்த்த கிழம்
வலச் சங்கை செவி சேர்க்கும்!
கால மதில் துயிலேறி கனவிறங்க
விழித்த நிலை காலிடுக்கில் வால் நீட்ட
சுட்ட விரல் மறந்த கனா
கனா... கனா... கனா...
அறியாதவை அறியாதார்
அறியாத அக்கனா-
அறிந்தால் அறியாத
அவ்வாலின் அகங் கண்டு
பிறர் அறியா வால் களையும்
என சொப்பனக் கிழவி நாடி
செப்பி சேர்த்த பின்
அரி வால் பிட்டம் விட்டு
பரிமா பிட்டம் ஏற
வால் விட்ட கனவால்
நீ புரவி யென
கிழவி பொட்டில்
வட்டப் பந்து பாவ
கம்பு பட்டு வந்தான் வீட்டுக்கு! வீட்டுக்கு வீட்டுக்கு
மலைப் புரவி முகம்பார்க்கத் தடவி
அணியுடல் துவங்க
பொன் மயிர் பரவ
முடிவாலென முடியக் காணோம்!
மலைப் புரவி முகம்பார்க்கத் தடவி
அணியுடல் துவங்க
பொன் மயிர் பரவ
முடிவாலென முடியக் காணோம்!
மலையென மாநிலத்தில்
கலையெனப் பெண்ணிடத்தில்
புகழ் புரவி வால் எங்கே
என நான் நோக்க
முகம் பார்த்துக் கனி பறக்க
எரி திரையில் இமை திறக்க
அறி சாய சாய்ந்திருந்தான்
தன்னறையில்!
அறி சாய
சாய்ந்திருந்தான் தன்னறையில்
அறி சாய சாய்ந்திருந்தான் தன்னறையில்
சுடர் விழி சுட, மட மங்கை
விழி சுடரென இருக்கையில்
கனவொரு புதிர்
தன்மனமொரு புதிர்
என் மனை வீற்ற இப்புதிர் யாரென?
உரி மனை ஒருவனுக்கோ,
உய்த்த உயிர்கள் ஓர் கணக்கோ?
கானல் கடந்த என் ஊர்க்கண்
காணும் துவக்கம்
என்றெனைக் கொண்டால்
வானவில் என்ற நான் வான்கா
விழித்த நிலைக் காலிடுக்கில் வால் நீட்ட
சுட்ட விரல்
மறந்த கனா...
பாடல்: வாழ்விட்ட பெயர்
படம்: குதிரை வால்
வரிகள்: சதீஸ் ராஜ தர்மர்
இசை: பிரதீப் குமார், மார்ட்டின் விஸ்ஸர்
பாடகர்: சிவம்