கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்

ஆசிரியர் மகாசுவேதா தேவி (Mahasuveda Devi) என்ற வங்காளி பெண். இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் கிருஷ்ணமூர்த்தி.

வட இந்தியாவில் உள்ள வங்காளத்தில் 15ம் நூற்றாண்டில் ஒரு நடைமுறை இருந்தது. ஒரு குறிப்பிட்ட சாதியினர் (Caste or Society) அதாவது பிராமணர்கள் மட்டுமே எழுத படிக்க முடியும். மற்ற அனைவரும் அதை செய்தால் மிகப் பெரிய தவறு என்று கை மற்றும் நாவை துண்டித்து (cut) விடுவார்கள். அதுவும் ஏதாவது பிராமணன் (Brahmin) என்று ஏமாற்றி படித்தோ அல்லது எழுதியிருந்தாலோ அவனை அங்குள்ள அரசன் யானையை விட்டு மிதிக்க வைத்து கொன்று விடுவார்கள்.

இந்த நிலையிலும் வங்காளத்தில் பழங்குடிச்சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் (Epic like Ramayana) படைக்கிறான். தனது சாதியை அவன் வெளியே செல்லவில்லை. அவனை உயர்குடியில் பிறந்தவன் என்று எண்ணி அங்கீகாரமும் அரசகவி என்ற பதவியும் வழங்குகிறார்கள். அவனது சாதி தெரியவரும்போது அவனைக் யானையை விட்டு மிதித்து கொல்லும்படி அந்த நாட்டு அரசன் உத்தரவிடுகிறான்.

அவன் சமூகமோ அவனுடைய திறமையை புரிந்து கொள்ள முடியாமல் அவனை காப்பாற்ற முன்வரவில்லை. அவன் செய்தது தவறுதான் என நினைத்தது அவனை அவர்களும் கைவிடுகிறார்கள். இறுதியில் அவன் தப்பிசென்று காட்டிலேயே உயிர் விடுகிறான்.


You'll only receive email when they publish something new.

More from Amaran
All posts